தமிழ்நாட்டில் உள்ள பழமையான விமான படைத் தளங்களை டிட்கோ உதவியுடன் புதுப்பித்து பயன்படுத்த விமான தர நிர்ணய அமைவனம் (டி. ஜி. ஏ. க்யூ. ஏ) திட்டமிட்டு வருகிறது. சூலுாரில் விமான பழுதுபார்ப்பு, பராமரிப்பு மையம் துவக்கப்பட்டுள்ளது என இந்திய விமானப்படை தர உறுதி இயக்குனரகத்தின் (டி. ஜி. ஏ. க்யு. ஏ) தலைவர் சஞ்சய் சாவ்லா தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறும் போது, சூலுார் விமான படைத்தளத்தை இந்திய விமானங்கள், ஹெலிகாப்டர்களை பழுதுபார்க்கும், பராமரிக்கும் தளமாகவும் மாற்ற உள்ளோம். அங்கு இதற்கென ஒரு அலுவலகம் துவக்க உள்ளோம்.
தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் (டிட்கோ), இதற்கான இடத்தை வழங்குகிறது. கோவையில் உள்ள மேக் கன்ட்ரோல் நிறுவனத்திற்கு பரிசோதனை மேற்கொள்ள அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்திய விமான தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் சான்றுகளை அளிக்கும் என்று கூறியுள்ளார்.