கோவை ஆர். எஸ். புரம் டிபி ரோட்டில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆம்பூர் பகுதியை சேர்ந்த தண்டபாணி(37) என்பவர் பெட்ரோல் போடும் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பங்க்கில் வரவு செலவு கணக்கு ஆய்வு செய்தபோது கடந்த மே மாதத்தில் இருந்து ரூ. 64, 000 கையாடல் நடந்திருப்பது தெரிய வந்தது. பங்கில் வேலை பார்த்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது தண்டபாணி பணத்தை கேஷியரிடம் ஒப்படைக்காமல் அங்கிருந்து தலைமறைவானது தெரிய வந்தது. இது குறித்து பெட்ரோல் பங்க் கேசியர் அஜித் குமார் (25), ஆர் எஸ் புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தண்டபாணியை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 9, 000 பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.