அமைச்சர் முத்துசாமி ஆய்வு

61பார்த்தது
வருகிற 14-6-2024, அன்று,
கோவையில் திமுக சார்பில் நடைபெற உள்ள,
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா,
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், திமுக கூட்டணி 40/40 மாபெரும் வெற்றியைப் பெற்றமைக்கு பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா,
வெற்றிக்குக் காரணமான மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களுக்குப் பாராட்டு விழா ஆகியவை ஒருங்கிணைந்து, திமுக சார்பில் பிரம்மாண்டமாக முப்பெரும் விழாவாக நடத்தப்படும் இடத்தை,

இன்று 9-6-2024, ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 11. 00 மணியளவில்,
மாண்புமிகு. தமிழ்நாடு வீட்டு வசதித்துறை நகர்ப்புற வளர்ச்சித் துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள்,

L&T பைபாஸ் சாலையில் இடத்தைப் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex. எம்எல்ஏ. ,
கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன்,
கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ. அ. ரவி,

கழக சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் கே. எம். தண்டபாணி,
கழக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அ. தமிழ்மறை,
கழக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன்,
கழக பொதுக்குழு உறுப்பினர்கள் ரகு துரைராஜ், ஆர். மணிகண்டன்,
ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி