கருமத்தம்பட்டி நகராட்சியில் தொடர்ந்து குப்பை கொட்டப்பட்டு வருவதாலும், தொற்று நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதால், நகராட்சி அலுவலகம் முன் 5-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் தங்கமணி பழனிசாமி மற்றும் எலட்சிபாளையம் பிரபாகரன் ஆகியோர் தலைமையில் இன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. குப்பை டெண்டர் ரத்து செய்யப்பட்ட போதிலும், அதே நிறுவனத்திற்கே தொடர்ந்து டெண்டர் கொடுப்பதில் உள்ள முறைகேடு குறித்து போராட்டக்காரர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
குப்பை வரி வசூலிக்கும் நகராட்சி, குப்பை அகற்றும் பொறுப்பை சரியாக நிறைவேற்றத் தவறுவதாகவும், இதனால் பொதுமக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருவதாகவும் குற்றம் சாட்டினர். தொடர்ந்து புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகளை கண்டித்த போராட்டக்காரர்கள், உடனடியாக குப்பைகளை அப்புறப்படுத்தக் கோரினார்கள். பொதுமக்களின் சுகாதாரத்திற்காக நடைபெறும் இந்த போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.