கோவை தெற்கு மாவட்டம், சூலூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கலங்கல் ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது.
கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் 559 பயனாளிகளை கொண்ட நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சூலூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மன்னவன் அவர்கள் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, காசி கவுண்டன் புதூர் நியாய விலை கடையில் பொங்கல் தொகுப்புகளை வழங்கினார்.
இவ்விழாவில் சூலூர் தெற்கு ஒன்றிய பொருளாளர் வடிவேல், கலங்கல் கிளை செயலாளர் சிவகுமார், அன்பழகன் தொழிற்சங்க துணை அமைப்பாளர் செல்வம், முத்துக்குமார், நாகராஜ், ரமேஷ், காசி கவுண்டன் புதூர் கிளை செயலாளர் சிவசாமி, ஆர். வி. எஸ். மணி, குருசாமி, தெற்கு ஒன்றிய ஐடி விங் அமைப்பாளர் லோகேஷ், மகளிரணி வளர்மதி, அனுசுயா மற்றும் பொதுமக்கள், கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.