உலக சிலம்ப விளையாட்டு சங்கம் மற்றும் Freak fitness அண்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது.
கோவை கீரணத்தம் பகுதியில் உள்ள Sns தொழில்நுட்பக் கல்லூரியில் உலக சிலம்ப விளையாட்டு சங்கம் மற்றும் freak fitness அண்டு ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் 2024 போட்டி நடைபெற்றது. இப்போட்டியானது Freak fitness மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனத் தலைவர் பிரபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக டாக்டர். சியாம் பிரசாத் முகர்ஜி நிறுவன செயலாளர் பேராசிரியர் கனகசபாபதி, பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் உத்தமராமசாமி கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். மேலும் இப்போட்டி 16, 17, 18, 19 வயது பிரிவாக நடைபெற்றது. இதில் ஒற்றை வால், இரட்டை வால், சுழற்வீச்சு என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது, மேலும் போட்டியில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து கலந்து கொண்டனர். மற்றும் சென்னை, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, திருநெல்வேலி, தேனி, திருச்செங்கோடு, கன்னியாகுமரி, திருவாரூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட பள்ளி, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.