நாச்சிமுத்து கோப்பை மற்றும் சிஆர்ஐ பம்பு கோப்பை இறுதி போட்டி

56பார்த்தது
நாச்சிமுத்து கோப்பை மற்றும் சிஆர்ஐ பம்பு கோப்பை இறுதி போட்டி
57-வது நாச்சிமுத்து கோப்பை ஆண்கள் மற்றும் 21-வது சிஆர்ஐ பம்பு கோப்பை பெண்கள் அகில இந்திய கூடை பந்து இறுதி போட்டி இன்று மாலை நடைபெறுகிறது.

மாலை 5. 00 மணிக்கு நடைபெறும் பெண்கள் பிரிவில் தென்னக இரயில்வே அணியை எதிர்த்து தென் மத்திய இரயில்வே அணி விளையாடுகின்றது.

ஆண்கள் பிரிவில் வருமான வரி அணியை எதிர்த்து இந்தியன் வங்கி அணி மாலை 6. 15 மணிக்கு விளையாடுகிறது.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மூன்று மற்றும் நான்காவது இடங்களுக்கான போட்டி மாலை 3. 30 மணிக்கு நடைபெறும்.

இதைத்தொடர்ந்து நடைபெறும் இறுப்போட்டியின் பரிசளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பேஸ்கட்பால் பெடரேஷன் ஆஃப் இந்தியாவின், தலைவர், ஆதவா அர்சுனா கலந்து கொண்டு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார், ஏபிடி லிமிடெட் நிறுவனத்தின், செயல் இயக்குனர் திரு. எம். ஹரி ஹர சுதன் தலைமை வகிக்கிறார். மேலும் சி. ஆர். ஐ. பம்ப்ஸ் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனரும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவருமான திரு. “ஜி. செல்வராஜ்” அவர்கள் முன்னிலை வகிக்கின்றார்.

தொடர்புடைய செய்தி