பொள்ளாச்சியில்
திமுக எம்பி. , ஜெகத்ரட்சகன் தொடர்புடைய நண்பரின் மகன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனனை
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர், மேலும் ஜெகத்ரட்சன் தொடர்புடைய உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது,
இந்த நிலையில் ஜெகத்ரட்சனின் நண்பரான தாராபுரம் பகுதி சேர்ந்த வழக்கறிஞர் அண்ணாதுரை என்பவரின் மகன் அருண் என்பவர் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் நல்லப்பா நகரில் வசித்து வருகிறார்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் அருண் வீட்டில் இன்று மதியம் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது வீட்டில் உள்ள அறைகளை சோதனை செய்ததோடு ஆவணங்கள் ஏதாவது இருக்கிறதா என்று சோதனை மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து ஒரு மணி நேரம் சோதனை முடித்த பிறகு அருண்குமாரை காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
அருண் ஊட்டியில் உள்ள ஜெகத்ரட்சணைக்கு சொந்தமான விடுதியை கவனித்து வருவதாக கூறப்படுகிறது, இதனால் வருமானம் வரித்துறை அதிகாரிகள் அருணை ஊட்டிக்கு அழைத்துச் சென்றார்களா? இல்லை தாராபுரத்தில் உள்ள தந்தை வீடிற்கு அழைத்துச் சென்று இருக்காலாம் என கூறப்படுகிறது.