கோவை: காவலரை தாக்கி நகை பறிப்பு – போலீசார் விசாரணை

0பார்த்தது
கோவை, கொச்சின் புறவழிச் சாலையில் நேற்று நள்ளிரவில், Q பிராஞ்ச் ஆய்வாளரின் வாகன ஓட்டுநரும் தலைமை காவலருமான பார்த்திபன் மற்றும் அவரது மனைவியர் மீது மூன்று பேர் கொண்ட மர்ம குழு தாக்குதல் நடத்தியது. தலையில் காயமடைந்த பார்த்திபன், முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் மனைவியிடம் இருந்த தாலி செயின், மோதிரம், பிரேஸ்லெட் உள்ளிட்ட நகைகள் பறிக்கப்பட்டன. சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி