தடாகம் பகுதியில் குரங்குகள் குடியேறத் தொடங்கியுள்ளன. இது குறித்து பொதுமக்கள் தகவல் வழங்கியதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு செய்தனர். மனிதர்கள் உணவு வழங்கும் பழக்கத்தால் விலங்குகள் அப்பகுதியில் நிலையாக தங்கும் ஆபத்து இருப்பதாகவும், இது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், எதிர்காலத்தில் குரங்குகள் அல்லது பிற விலங்குகள் தென்பட்டால் உடனடியாக தகவல் அளிக்க பொதுமக்களை வனத்துறை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.