கோவை: தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆய்வுக் கூட்டம்

70பார்த்தது
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த முத்துகவுண்டன்புதூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக கோவை மண்டல ஐடி விங் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. 

இதில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த திமுக ஐடி விங் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் செந்தில்பாலாஜி மற்றும் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் கலந்துகொண்டு ஐடி விங் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர். இந்த நிகழ்வில் பங்கேற்க வந்த அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு திமுக ஐடி விங் நிர்வாகிகள் 'பொட்டு வச்ச தங்க குடம்' என்ற விஜயகாந்த் திரைப்பட பாடலை ஒலிக்கவிட்டு வரவேற்பு கொடுத்து வைஃப் செய்தனர். 

இதனை தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்த திமுக ஐடி விங் நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்ற நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக கட்சிப் பணிகளை தொடங்கிய பின்னர் கொங்கு மண்டலத்தில் திமுக எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி