மேட்டுப்பாளையம் அருகே பவானிசாகர் அணை பகுதியில் மீனவர்கள் ராட்சத மீன்களை பிடித்து அசத்தியுள்ளனர். சிறுமுகையை சேர்ந்த ஆஷிக் தனது நண்பர்களுடன் தூண்டில் போட்டு மீன் பிடித்த போது, 25 கிலோ எடையுள்ள தேளி மீன் ஒன்று சிக்கியது. இது பொதுமக்களை வெகுவாக ஆச்சரியப்பட வைத்தது. அதே பகுதியில் ஜே.ஜே. நகரை சேர்ந்த பூபதி (23) நேற்று வலைவீச்சு மூலம் 24 முதல் 32 கிலோ எடையுள்ள மீன்களை பிடித்து மொத்தம் 260 கிலோ மீன்களை கைப்பற்றினார்.