கோவை: கஞ்சா பறிமுதல்- தேனி இளைஞர் கைது!

57பார்த்தது
சமூகத்தைச் சீரழிக்கும் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் முனைப்புடன் செயல்பட்டு வரும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஆலந்துறை காவல் துறையினர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஆலந்துறை காவல் நிலையத்தினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நரசிபுரம் ஆலமரம் அருகே தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தர் (30) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து சுமார் 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட சுந்தர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி