கோவை: சிந்தூர் வெற்றிக்கு பாராட்டு- மராத்தான் போட்டி

85பார்த்தது
சிந்தூர் போரில் இந்தியா பெற்ற வெற்றியை நினைவுகூரும் வகையில், சூலூர் கருமத்தம்பட்டியில் இன்று மராத்தான் ஓட்டம் நடைபெற்றது. 15 வயதுக்கு உட்பட்ட மற்றும் அதிகமான ஆண்கள், பெண்கள் என பல பிரிவுகளில் 3 மற்றும் 5 கிலோமீட்டர் ஓட்டப் போட்டிகள் நடந்தன. முதல் ஐந்து இடங்களைப் பிடித்தவர்களுக்கு பதக்கங்களும், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன. ஆர்எஸ்எஸ் சீருடையில் ஓர் தொண்டர், தேசியக் கொடியுடன் ஜெய்ஹிந்த் முழக்கத்துடன் ஓடுவது அனைவரையும் கவர்ந்தது.
நிகழ்வில் பாஜக மாவட்டத் தலைவர் கரு. மாரிமுத்து, பொதுச்செயலாளர் கோபால்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். மாணவி ஒருவர், வீரர்களின் தியாகத்தை போற்றும் நிகழ்வில் பங்கேற்று வெற்றி பெற்றது பெருமையாக உள்ளதாகக் கூறினார்.
மாவட்டத் தலைவர் மாரிமுத்து, இந்திய சுதந்திரம் மக்களின் தன்னெழுச்சியின் விளைவாக கிடைத்ததாகவும், அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்ற இந்த நிகழ்வு அதற்கு சான்றாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி