கோவை: ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

72பார்த்தது
கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் 30க்கும் மேற்பட்ட துறை அலுவலகங்களில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அலுவலகங்கள் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா, தேவையற்ற ஆவணங்கள் சேமிப்பாக வைக்கப்படுகிறதா என்பதை நேரில் சென்று ஆய்வு செய்தார். பழைய ஆவணங்களை ரெக்கார்டு அறைக்கு அனுப்ப ஊழியர்களுக்கு உத்தரவிடினார். சில அலுவலகங்களில் புதிய கேபின்கள் அமைக்கப்பட்டதை பாராட்டினார். மேலும், பழைய ஆவணங்களை பாதுகாக்க தனி வசதி தேவை என்ற கோரிக்கையையும் கவனத்தில் எடுத்தார்.
ஆட்சியரின் திடீர் ஆய்வு காரணமாக அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி