தமிழகம் முழுக்க புதிய நிர்வாகிகளை தன்னுடையை நேரடி பார்வையில் த. வெ. க. தலைவர் நடிகர் விஜய் நியமித்து வரும் நிலையில் பல்வேறு விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் கோவை சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக சாதாரண ஆட்டோ ஓட்டுனராக உள்ள பாபு என்பவரை நியமித்து அதிரடி காட்டியுள்ளார்.
தனது கட்சியில் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே பதவிகள் வழங்கப்பட்டு வருவதாக எழுந்து வரும் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் ஆட்டோ ஓட்டுனரை மாவட்ட செயலாளராக நியமித்துள்ளார். இந்நிலையில் புதிதாக சூலூர் சட்டமன்ற தொகுதி கோவை புறநகர் நகர் கிழக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற பாபுவிற்கு நேற்று மகளிர் மற்றும் பல்வேறு அணியினர் திரளாக கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய த. வெ. க. கோவை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாபு, மக்களின் அடிப்படை தேவைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் வகையில் தமிழக வெற்றிக்கழகத்தின் செயல்ஙாடுகள் இருக்கும் என அவர் தெரிவித்தார்.