கோவை கணபதி அருகே ஆவாரம்பாளையத்தில், சமையலறையில் எரிவாயு சிலிண்டர் திறந்த நிலையிலேயே ஒரு 3 வயது சிறுவன் வீட்டுக்குள் மாட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமையல் செய்து கொண்டு இருந்த தாய், வீட்டின் வெளியில் வந்த நிலையில் குழந்தை கதவை உள்ளே இருந்து பூட்டி விட்டது. தாயின் அலறலைக் கேட்டு உதவிய தூய்மை பணியாளர் மற்றும் பணியாளர் நல சங்க உறுப்பினர்கள், விரைந்து கதவை உடைத்து நேற்று குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.