பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம்

445பார்த்தது
பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம்
கோவை: சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, இருகூர், கோவை, போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் இடையே, தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், ஷொர்னுார் - கோவை (06458) ரயில் இன்றும், நாளையும் போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் வரை மட்டுமே இயக்கப்படும். கோவை ரயில்வே சந்திப்புக்கு செல்லாது மறுமார்க்கத்தில், கோவை-ஷொர்னுார் (06459) ரயில் இன்றும், நாளையும், போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்பட்டு, ஷொர்னுார் சென்றடையும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி