கோவை சாய்பாபா காலனி NSR சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு அம்மனுக்கு அலங்கார பூஜை மற்றும் மாபெரும் அன்னதானம் நிகழ்வு இன்று மதியம் நடைபெற்றது. ஆடி மாதம் 16ஆம் நாள் வியாழக்கிழமை அன்று காலை கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து ஆடி மாதம் 19 ஆம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனை நடைபெற்றது.
தொடர்ந்து, மதியம் மாபெரும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 2500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாலை 5 மணி அளவில் அம்மன் திருவீதி உலா ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலிருந்து நான்கு ரோடு வழியாக கே. கே புதூர் விநாயகர் கோயிலை அடைந்து, மீண்டும் NSR சாலையில் உள்ள ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு வந்தடைந்தது. இந்நிகழ்விற்கு ஏராளமான பக்த கோடிகள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
இதில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் அறக்கட்டளை தலைவர் ராமசாமி, செயலாளர் சசி பரத், பொருளாளர் சிவக்குமார், சப் ரிஜிஸ்டர் ராம் மூர்த்தி, நிர்வாகிகள் சண்முகநாதன், கே எஸ் ராஜன், விஜயகுமார், பார்த்திபன், அருண் நாராயணன், கோபாலகிருஷ்ணன், செந்தில்குமார், சத்திய பிரகாஷ்,
பூசாரிகள் சிங்கார வேலன், மகாதேவன், விஸ்வநாதன், ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.