கோவை இடிகரை என்ஜிஜிஒ காலனி பகுதியில் மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது மொபட்டில் வந்த 2 பேரிடம் சோதனை செய்தபோது அவர்களிடம் 4 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் திருப்பூரை சேர்ந்த ரமேஷ் (45), ஒடிசாவை சேர்ந்த ஜடபா பேஸ்ரா (33) என தெரியவந்தது. இவர்கள் பல்வேறு பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய வாகனத்தில் கஞ்சா பொட்டலம் பதுக்கி கொண்டு சென்றது தெரியவந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். இதேபோல் மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சுங்கம் பைபாஸ் ரோட்டில் சோதனை செய்தபோது அங்கே கஞ்சா பொட்டலம் விற்ற ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பீஸ்மா தாண்டி (29) என்பவரை கைது செய்தனர். இவரிடம் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஜடபா பேஸ்ரா பீகாரில் இருந்து கஞ்சா கடத்தி வந்து பல்வேறு இடங்களில் விற்பனைக்கு அனுப்பி வைப்பதாக தெரியவந்தது. நகரில் பல்வேறு இடங்களில் வடமாநிலத்தை சேர்ந்த சிலர் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.