கோவை: தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
கோவை துடியலூரில் உள்ள பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் இல்லம் மற்றும் மார்ட்டின் குழும அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் இன்று சோதனையில் இறங்கியுள்ளனர். அமலாக்கத் துறை அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இரு கார்களில் வந்துள்ள அமலாக்கத் துறையினர் இந்த சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.