கோவை பீளமேடு கிரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் தங்கவேல் மனைவி லதா (48). இவர் நேற்று முன்தினம் மொபட்டில் சிங்காநல்லூர்-காமராஜர் ரோடு வரதராஜபுரம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது.
இதில், கீழே விழுந்த லதா மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.