கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை வரவேற்பு

84பார்த்தது
கோவை விமான நிலையத்தில் பூனாவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை வரவேற்பு

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெறும் 8 வது ஆசிய நாடுகளுக்கான கராத்தே போட்டியில் கோவையை சேர்ந்த மாணவர்கள் பதக்கங்களை குவித்து சாதனை.


மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் 2 நாட்கள் நடைபெற்று வந்த ஆசிய நாடுகளுக்கான 8 வது கராத்தே போட்டியில் கோவை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

உலக கோஜூ ரியூ கராத்தே பெடரேசன் சார்பில் ஆண்டு தோறும் மாவட்ட மாநில, இந்திய அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு ஆசிய அளவிலான போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் உலக அளவில் கோஜூ ரியூ கராத்தே போட்டிகளில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்நிலையில் அகில இந்திய அளவில் கடந்த ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கராத்தே போட்டிகள் நடைபெற்று 50 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் 50 பேர் ஜூன் 8 சனி மற்றும் 9 ஞாயிறு ஆகிய இரு தினங்கள் புனே நகரில் சத்திரபதி சிவாஜி மகாராஜ் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்த 8 வது ஆசிய நாடுகளுக்கான கராத்தே போட்டிகளில் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி