பணம் கையாடல்-காவலர்கள் பணியிட மாற்றம்

80பார்த்தது
பணம் கையாடல்-காவலர்கள் பணியிட மாற்றம்
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் புலனாய்வுப் பிரிவு காவல் நிலையத்தில் பணி புரியும் பெண் காவல் உதவி ஆய்வாளர் பார்வதி மற்றும் சிறப்பு காவல் ஆய்வாளர் (எஸ்எஸ்ஐ) யூசுப் ஆகிய இருவரும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு குற்றவாளியிடம் இருந்து சில தொகையை கைப்பற்றியதாகவும், கைப்பற்றப்பட்ட தொகையில் ஒரு பகுதியை எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த மாநகர காவல் ஆணையர், இது குறித்து துணை ஆணையர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில்
அந்த குற்றச்சாட்டை உறுதி செய்தனர்.

இதனை அடுத்து, காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இரண்டு காவலர்களையும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். இதை தொடர்ந்து உதவி ஆய்வாளர் பார்வதி நேற்று மாலை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்தனர்.

மேலும் சிறப்பு உதவி ஆய்வாளர் யூசுப் சென்னையில் சில பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

குற்றவாளிகளிடம் இருந்து பொது மக்களுக்கு சேர வேண்டிய பணத்தை பாதுகாக்கின்ற பொறுப்பில் இருக்கின்ற காவலர்களை கையாடல் செய்த சம்பவம் கோவையில் அரங்கேறி உள்ளது.

தொடர்புடைய செய்தி