கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் குடும்பத்தகராறில் காயமடைந்த சிவகுமார் என்பாரின் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர் தமிழரசனை, சிவக்குமார் என்பவர் தென்னை மட்டையால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த தமிழரசன் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கருமத்தம்பட்டி காவல்துறையினர் சிவக்குமார் மீது மருத்துவ பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர், சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.