கோவை தெலுங்குபாளையத்தைச் சேர்ந்த திலகராசு (55) செக்யூரிட்டியாக உள்ளார். நேற்று (டிச.27) இவர் இருகூர் பஜனை கோவில் தெருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, இருகூரைச் சேர்ந்த பிரதீப் (26) மற்றும் ஹோப்ஸ் பகுதியைச் சேர்ந்த ஜாக்சன் (21) ஆகிய இருவரும் நிறுவனத்தின் ஜெனரேட்டரில் இருந்து 60 லிட்டர் டீசலை திருடிக்கொண்டிருந்தனர். இதனை கவனித்த திலகராசு இருவரையும் கையும் களவுமாக பிடித்து சிங்காநல்லூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.