கோவை: தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

79பார்த்தது
கோவை: தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
கோவை மாவட்டம், சிந்தாமணி பகுதியில் ஆர். எஸ். புரம் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த முதியவர் ஆறுமுகம் (76) என்பவரிடம் விசாரணை செய்தனர். 

அப்போது அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றுக் கொண்டிருந்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து பத்து பொட்டலங்கள் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆறுமுகம் நேற்று கைது செய்யப்பட்டு இன்று (பிப்ரவரி 4) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி