கோவை: அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

65பார்த்தது
கோவை: அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறிப்பு
கோவை சரவணம்பட்டி விசுவாசபுரம் கார்த்திக் நகரை சேர்ந்தவர் சங்கர்(45). இவர் சத்தி ரோட்டில் பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று சங்கர் சரவணம்பட்டி மருதம் நகர் ஜங்ஷன் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சங்கருக்கு ஏற்கனவே தெரிந்த சுரேஷ்(47) என்பவர் வந்தார். அவர் தனக்கு அவசரமாக ரூ. 1 லட்சம் தேவைப்படுகிறது என சங்கரிடம் கேட்டார். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்தார். 

இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி மிரட்டி சங்கரிடம் இருந்த ரூ. 500ஐ பறித்து தப்பி சென்றார். இது குறித்து சங்கர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் பறிப்பில் ஈடுபட்ட மணியக்காரம்பாளையம் ரங்கநாதர் தெருவை சேர்ந்த சுரேஷ்(47) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி