வீட்டில் கட்டிலுக்கு அடியில் பெட்டிக்குள் கொம்பேறி மூக்கன்

59பார்த்தது
வீட்டில் கட்டிலுக்கு அடியில் இருந்த பெட்டிக்குள் கொம்பேறி மூக்கன் -
பாம்பை உயிருடன் மீட்ட வன உயிர் பாதுகாப்பு அறக்கட்டளை வீரர்

கோவை சிங்காநல்லூர் பகுதியை சார்ந்தவர் ஆதித்யா.
இவர் வீட்டின் பின்புறத்தில் இருந்து ஒரு பாம்பு ஜன்னல் வழியாக வந்ததனை பார்த்து வீட்டுக்குள் பாம்பு புகுந்ததாக பாம்பு பிடி வீரருக்கு தகவல் தந்தார்.

வன உயிர் பாதுகாப்பு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக் கட்டளையை சார்ந்த பாம்பு பிடி வீரரான மோகன், ஆதித்யா வீட்டிற்கு சென்றார்.

பாம்பை பார்த்த போது பாம்பு இருந்த இடம் தெரியவில்லை. வீட்டின் ஜன்னல் வழியாக பாம்பு உள்ளே புகுந்ததாக வீட்டின் உரிமையாளர் ஆதித்யா தெரிவித்த நிலையில் அந்த வீட்டின் அனைத்து பகுதிகளிலும் தேடி இருக்கின்றார்.

அப்பொழுது படுக்கை அறையில் உள்ள கட்டிலுக்கு அடியில் சூட்கேஸ் ஒன்று இருந்ததை பார்த்து அதனை திறந்த பொழுது பாம்பு படுத்து இருந்தது. அந்தப் பாம்பு விஷமற்ற கொம்பேறி மூக்கன் பாம்பு என்பது தெரிய வந்தன.
அந்த பாம்பு மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட பாம்பு அதற்கு ஏற்ற வாழ்விடத்தில் விடப்பட்டது.

தொடர்புடைய செய்தி