கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அடுத்த கள்ளி மடை, தேவேந்திர குல வேளாளர் சமூகம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக, தேசிய தலைவர் இம்மானுவேல் சேகரன் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, மாபேரும் இரத்ததான முகாம், பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா, அவரது திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் விழா, அன்னதான விழா, மற்றும் இளைஞர்களுக்கு
வேலை வாய்ப்பு முகாம் என ஐம்பெரும் விழாவாக நேற்று நடைபெற்றது. கள்ளிமடை ஊர் பொதுமக்கள் சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்வில், சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்ததான முகாமில் இரத்ததானம் அளித்தனர் இதனை தொடர்ந்து பொதுமக்கள் அனைவருக்கும் மதிய உணவு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது