மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

62பார்த்தது
மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். டாடாபாத் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மண்டல செயலாளர் கார்த்தி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘மின்வாரியத்தில் அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வரும் கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளராக மாற்ற வேண்டும். கேங்மேன் பணியாளர்களை சொந்த ஊருக்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும். உடற்தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வில் பணி அமர்த்தப்படாமல் உள்ள 5493 கேங்மேன்களுக்கு உடனடியாக பணி ஆனை வழங்கி உத்தரவிட வேண்டும்’’. என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மண்டல நிர்வாகிகள், ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி