மாநகராட்சி மாமன்ற கூட்டம்

65பார்த்தது
மாநகராட்சி மாமன்ற கூட்டம்
கோவை: கோவை மநகராட்சி மேயராக பதவி வகித்த கல்பனா, கடந்த 3-ஆம் தேதி ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, புதிய மேயரைத் தோ்ந்தெடுக்க வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி மாநகராட்சி அலுவலகத்தில் மறைமுகத் தோ்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் வகையில், மாநகராட்சி மாமன்ற கூட்டம் துணை மேயா் ரா. வெற்றிச்செல்வன் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் மா. சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தாா். இந்தக் கூட்டத்தில், மத்திய நிதிநிலையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதைகண்டிப்பதாக சிறப்புத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில், பல்வேறு பணிகள் தொடா்பாக 333 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் குறிப்பாக, பில்லூா் அணையைத் தூா்வார முதல்கட்டமாக ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு, சிறுவாணி அணையில் ஏற்படும் நீா்க் கசிவு மூலமாக தினமும் 10 லட்சம் லிட்டா் தண்ணீா் வெளியேறுவதைத் தடுக்க, நகராட்சி நிா்வாக இயக்குநா் மூலமாக ரூ. 3 கோடி நிதி பெற்று அணையில் சீரமைப்புப் பணி மேற்கொள்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், கோவை ஒண்டிப்புதூரில் உள்ள திறந்தவெளி சிறைச்சாலை மைதானம் உள்ள இடத்தில் சா்வதேச கிரிக்கெட் மைதானம் அமையவுள்ள நிலையில், அந்த இடத்தை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு நிலமாறுதல் செய்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி