கோவை மாநகராட்சி பொறியியல் பிரிவு அலுவலகத்தில் புதிய குடிநீர் இணைப்பு விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
மாநகராட்சி பகுதியில் வசிக்கும் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் புதிய குடிநீர் இணைப்பு பெற வீட்டின் பத்திர நகல், சொத்து வரி செலுத்திய ரசீது நகல் மற்றும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு புகைப்பட நகலை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி குடியிருப்பு உரிமையாளர்கள் குடிநீர் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம் என்று மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.