கோவை: உங்களை நீங்களே கலாய்த்து கொள்கிறீர்கள் - டிஆர்பி ராஜா!

65பார்த்தது
கோவையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, செய்தியாளர்கள் அண்ணாமலையின் சவுக்கடி பற்றி கேட்ட கேள்விக்கு, உங்களை நீங்களே கலாய்த்து கொள்கிறீர்கள் என்று கூறியவர், இதுபோன்ற போராட்டங்களை தவிர்க்க வேண்டும் எனவும் இது மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்த விடக்கூடாது எனவும் தெரிவித்தார். மேலும் இது போன்ற போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டும் எனவும், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து உள்ளது எனவும் தெரிவித்தார். பாலியல் வழக்கில் தொடர்புடைய நபர் அரசியல் பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்தது தொடர்பான கேள்விக்கு, பொது வாழ்வில் இது போன்று புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதை தவிர்க்க முடியாது என பதிலளித்தார். மாணவியின் பாலியல் வழக்கு சிபிஐ-க்கு மாற்ற வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி இருப்பது குறித்த கேள்விக்கு, இந்த விவகாரத்தை அரசியலாக்கி லாபம் தேட முயற்சிப்பது வருத்தத்திற்குரியது என்றும் இதுபோன்ற நேரத்தில் அனைத்து இயக்கங்களும் ஒன்றாக சேர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு துணை நிற்க வேண்டும் என்றும் தெரிவித்த அவர், முதல்வருக்கு மக்களிடையே கிடைக்கும் ஆதரவை பொறுத்துக் கொள்ள முடியாமல் இது போன்ற வேலைகளை செய்து வருவதாகவும், தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி