கோவை: ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் தொழிலாளி கொலை

81பார்த்தது
கோவை மாவட்டம் சூலூரில், ஓரினச்சேர்க்கைக்கு சம்மதிக்காததால் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி சுபான் அன்சாரி (50) கல்லால் தாக்கி கொல்லப்பட்டார்.
அரசூர் அருகே டாஸ்மாக் கடை பக்கத்தில் அரைநிர்வாண நிலையில் சடலமாக கிடந்த அவரை போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர். அவரது தலையில் கல்லால் தாக்கிய காயங்களும், ஆசனவாயில் மரக்கட்டை சொருகப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.
பாதுகாப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் முக்தர் (31) என்பவரை கைது செய்தனர். விசாரணையில், முக்தருக்கு ஓரினச்சேர்க்கை பழக்கம் இருப்பதாகவும், தனது இச்சைக்கு அன்சாரி சம்மதிக்கவில்லை என்பதாலே கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்தார். அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி