கோவை: பொதுமக்களை துரத்திய காட்டு யானையால் பரபரப்பு

64பார்த்தது
சாடிவயல் பகுதியில் உணவு தேடி வந்த ஒற்றை ஆண் காட்டு யானை, அங்கிருந்த வாகனங்களை தாக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளிவந்த யானை, சோதனைச் சாவடி பகுதியில் சென்றபோது, அங்கு இருந்த பொதுமக்களை துரத்தியதாக கூறப்படுகிறது. யானையின் தாக்குதலால் அதில் இருந்தவர்கள் அச்சத்தில் தலைதெறிக்க ஓடி தப்பினர்.
பின்னர், யானை அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு வாகனத்தை தம்பிக்கையால் தள்ள முயற்சி செய்தது.
தகவல் அறிந்த வனத்துறையினர் உடனடியாக அந்த இடத்திற்கு வந்து நடவடிக்கை எடுத்தனர். கடுமையாக முயற்சி செய்த பிறகு, அவர்கள் அந்த யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள் அச்சத்தில் தவித்தனர். யானைகள் வனத்திலேயே இருப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி