கோவை: இருப்பை காட்டவே விஜய் அறிக்கை வெளியிடுகிறார்

82பார்த்தது
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக ராஜீவ் காந்தி, விஜய் அன்புச் சொல்கள் என்ற கருத்தை நக்கல் நையாண்டி செய்து இருக்கிறார். கடந்த ஆண்டு விஜயின் தந்தை என் மகன் என்னை பராமரிக்கவில்லை என எல்லா மீடியாக்களிலும் கூறிக் கொண்டு இருந்தார். 

தன் மகனையே தான் பராமரிக்கப்படவில்லை என்று திட்டுவாங்கியவர் தான் விஜய். அவருக்கு தமிழ்நாட்டினுடைய தாய்மார்கள் தந்தையர்கள், குரல் தெரியாது. வெங்கையா நாயுடு போன்றவர்கள் எல்லாம் தமிழ்நாட்டின் நிலையை புரிந்து கொண்டவர்களாக இருந்தார்கள். ஆனால் தமிழ்நாட்டின் முகமாக இருக்கக் கூடிய நிர்மலா சீதாராமன், தந்தை பெரியார் மீதும் பேரறிஞர் அண்ணா மீதும் கலைஞர் மீதும் தீராத வன்மத்தோடு இருக்கிறார். 

அதனால் மோடியிடமும், ஆர்.எஸ்.எஸ் இடமும் தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யக் கூடாது என்று கூறுகிறார். அவர் தயாரித்த பட்ஜெட்டில் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற வார்த்தைகள் இல்லை. அப்போது மரியாதைக்குரிய விஜய் எங்கு தூங்கிக் கொண்டு இருந்தார் என தெரியவில்லை. ஆனால் இன்று பாய்ச்சனுக்கும் பாயசத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் எழுதிக் கொண்டு இருக்கிறார். தான் இருப்பை காட்டுவதற்காகவே அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் விஜய் என்று தோன்றுகிறது என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி