ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததை கண்டித்து, சலோ எல்ஓசி என்ற புதிய சமூக அமைப்பு, அமைதியையும் ஒற்றுமையையும் வலியுறுத்தும் வகையில் ஒரு மாபெரும் இருசக்கர வாகன பேரணியை ஆரம்பித்துள்ளது. 3600 கி. மீ பயணம் – ஆன்மீகத்தையும் ஒற்றுமையையும் ஒருங்கிணைக்கும் பாதை
இந்த பேரணி கேரளாவின் ஆன்மீகத் தலம் காலடியில் இருந்து தொடங்கி, ஜம்மு-காஷ்மீரின் எல்லையருகே உள்ள டீட்வாலில் அமைந்துள்ள சாரதா யாத்ரா க்ஷேத்ரத்தில் முடிவடைகிறது. நேற்று கோவை வழியாக வந்தவர்களுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. சுமார் 3600 கிலோமீட்டர் தூரம் பயணிக்கவுள்ள இந்த புல்லட் பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகள் பங்கேற்றுள்ளன.