கோவை: உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் போக்குவரத்து மாற்றம்!

62பார்த்தது
உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் இன்று அதிகாலை கேஸ் ஏற்றி வந்த லாரியில் இருந்து டேங்கர் கழன்று விழுந்து விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநகர காவல் ஆணையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
இச்சம்பவம் காரணமாக, மேம்பாலத்தைச் சுற்றி 500 மீட்டர் தூரத்திற்கு உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். இந்த செய்தி அறியாமல் வந்த மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பினர். இப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளன. கேஸ் கசிவு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே கடைகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. வாகனங்கள் புரூக்பாண்டு சாலை, மரக்கடை, ரயில்வே நிலையம் பின்புறம் மற்றும் தண்டுமாரியம்மன் கோவில் பகுதிகளில் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படுகின்றன. சுமார் 30க்கும் மேற்பட்ட போக்குவரத்து காவல்துறையினர் இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் பயணிப்பவர்கள் மாற்று வழிகளை பயன்படுத்தி பயணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி