கோவை: புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!

60பார்த்தது
உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ரேஸ்கோர்ஸில் சுகாதாரத்துறை மற்றும் புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் நேற்று இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பவன்குமார் துவக்கி வைத்து பேரணியில் தானும் பங்கேற்றார். நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு புகையிலை ஒழிப்பை வலியுறுத்தினர்.
இதையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், பள்ளி-கல்லூரிகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து கண்காணிக்க ஒருங்கிணைந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். மேலும், இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி