கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உச்சநீதிமன்றம் வழங்கிய பட்டியலின வகைப்படுத்துதல் தீர்ப்பை தமிழக அரசு உடனே நடைமுறைப்படுத்த வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரத்தில் பட்டியலின துணை வகைப்படுத்துதல் வேண்டி, தேசிய ஆணையம், மத்திய அரசு அமைத்திட வேண்டும் என்று இந்திய பட்டியலினம் துணை வகைப்படுத்துதல் போராட்டக் குழு, தமிழ்நாடு அனைத்து அருந்ததியர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மகா தலித் கூட்டமைப்பு, இந்திய கணசங்கம் கட்சி இணைந்து. 25 அம்ச கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அரசு சாதிவாரியான கணக்கெடுப்பு மேற்கொள்வதை வரவேற்கும், அதே வேளையில் சாதி வாரியான கணக்கெடுப்பின் போது, ஆதிதிராவிடர் எனும் பொது பெயரில் கணக்கெடுப்பு நடத்தக் கூடாது, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்று, பட்டியல் என துணை வகைப்படுத்துதல் செய்ய தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால், விரைவில் தமிழகம் தழுவிய அளவில் சட்டமன்ற வாரியாக மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.