தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று கோவையில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. குறிப்பாக மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ. 1, 200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டதை ஒட்டி, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பூஜை செய்வதற்காகவும், கோவில்களில் சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்வதற்காகவும் அதிக அளவில் பூக்களை வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக கோவையில் உள்ள ஆர். எஸ். புரம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
கடந்த 10-ம் தேதி ஒரு கிலோ ரூ. 400-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ நேற்று ரூ. 500-க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதன் விலை மேலும் அதிகரித்து ரூ. 1, 200-ஐ தொட்டுள்ளது.
மற்ற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். புத்தாண்டு கொண்டாட்டம் நிறைவடைந்த பின்னரே பூக்கள் விலை குறைய வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.