முகூர்த்த சீசன் இல்லாததுடன் மழை மற்றும் காற்று காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளதால், கோவையின் ஆர். எஸ். புரம் பூ மார்க்கெட்டில் விலை இன்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ. 2, 000 வரை விலை சென்ற மல்லிகைப்பூ, தற்போது ரூ. 400க்கு விற்பனையாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் பூக்களை வாங்கி சென்றனர். இதேபோல், ஜாதி மல்லி, முல்லை, சம்பங்கி, செவ்வந்தி உள்ளிட்ட பல பூக்களும் பழைய விலையுடன் ஒப்பிடுகையில் குறைந்த விலையில் விற்பனையானது. முகூர்த்த நாட்கள் மற்றும் திருவிழாக்கள் தொடங்கும் போது விலை மீண்டும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.