கோவை: காளைகளுடன் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டம்

55பார்த்தது
புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், கோவையில் ஒரு வித்தியாசமான கொண்டாட்டம் நடந்துள்ளது. கோவை கே. கே. புதூர் பகுதியைச் சேர்ந்த பொன்மாலை பொழுது நண்பர்கள் குழு என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், தங்களது செல்லப் பிராணிகளுடன் இணைந்து கேக் வெட்டி புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். 

பல்வேறு துறைகளில் பணியாற்றும் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பலரும் இந்த குழுவில் இணைந்து, தங்களது ஓய்வு நேரத்தை இயற்கையோடு இணைந்து கழிக்கின்றனர்.இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில், இவர்கள் காளைகள், ஆடுகள், கெடாக்களுக்கும் கேக் கொடுத்து வாழ்த்தினர். விவசாயிகளின் நிலைமை குறித்து கவலை தெரிவித்த இளைஞர்கள், அவர்களுடைய நலனுக்காகவும் பிரார்த்தனை செய்தனர்.ரேஷன் கார்டில் காளைகள், ஆடுகளுக்கு உணவு இல்லை என்றாலும், எங்கள் குடும்பத்தில் அவை ஒரு அங்கம் எனக் கூறும் இளைஞர்கள், தங்களது இந்த வித்தியாசமான கொண்டாட்டம் மூலம் இயற்கையோடு இணைந்து வாழ வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றனர்.

தொடர்புடைய செய்தி