கோவை: புத்தகத் திருவிழா - கோலாகலமாகத் தொடங்கத் தயாராகிறது!

82பார்த்தது
கோவையில் ஒன்பதாவது கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2025, அடுத்த மாதம் (ஜூலை) 18 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. கோவை மாவட்ட நிர்வாகமும் கொடிசியாவும் இணைந்து நடத்தும் இந்தப் புத்தகத் திருவிழாவிற்கான இலச்சினையை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த அறிமுக விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், புத்தகத் திருவிழா தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்களுக்குக் கட்டணமில்லாமல் திறந்திருக்கும். இந்த ஆண்டு, 280-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன என்று தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி