கோவை - திருச்சி சாலை ஒண்டிப்புதூர் அருகே கொக்காலி தோட்டம் 4-வது வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (43). தொழிலாளியான இவர், குடும்பத் தகராறு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். மேலும், மதுப்பழக்கத்துக்கு ஆளான அவர், வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த செல்வராஜ், நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.