கோவை: 9-ம் வகுப்பு மாணவன் திடீர் மரணம்

341பார்த்தது
கோவை: 9-ம் வகுப்பு மாணவன் திடீர் மரணம்
கோவை சரவணம்பட்டியில் உள்ள கால்பந்து பயிற்சி மையத்தில் விளையாடிக் கொண்டிருந்த துடியலூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவன் கிருத்திக் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். 9-ம் வகுப்பு முடித்து, 10-ம் வகுப்பு செல்லவிருந்த கிருத்திக், கால்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடும் போது உடல்நலம் பாதிக்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி