கோவை: தண்டவாளத்தில் கல் வைத்த 4 வாலிபர்கள் கைது!

56பார்த்தது
கோவை ரயில்நிலையம் அருகே தண்டவாளத்தில் கல்லை வைத்து, சிக்னல் பாக்சுக்கு சேதம் விளைவித்த நான்கு வாலிபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடியை சேர்ந்த வின்சென்ட் ராஜ் (20), விஜயசங்கர் (21), சதீஷ்குமார் (22), புவனேஷ்வரன் (20) என்ற இளைஞர்கள், திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்துவருகின்றனர்.
சென்னையிலிருந்து வந்த சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் வடகோவை ரெயில்நிலையம் அருகே சிக்னல் ஒளிக்காததை என்ஜின் டிரைவர் கவனித்து ரெயிலை நிறுத்தினார். பின்னர், அனுமதி பெற்று மெதுவாக பயணித்தபோது, சிக்னல் பாக்சை சேதப்படுத்தியதையும், தண்டவாளத்தில் கல் வைக்கப்பட்டதையும் கண்டறிந்தார். உடனடியாக அவர் இது பற்றி ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து போலீசார் விரைந்து சென்று நால்வரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி