கோவை வனச்சரக அலுவலர் தலைமையிலான வனத்துறையினர் நேற்று காந்திபுரம் ராம் நகர் ராமர் கோயில் அருகே அதிரடி வாகன சோதனை நடத்தினர். அப்போது, மேட்டூரில் இருந்து கோவைக்கு யானை தந்தம், சிறுத்தையின் பற்கள் மற்றும் நகங்களை விற்பனை செய்ய கொண்டு வந்த கிருபா (24), சதீஷ்குமார் (26), விஜயன் (45), கௌதம் (26), ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து வன உயிரின பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக வன குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், கைது செய்யப்பட்ட நான்கு பேரும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.