சிங்காநல்லூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

76பார்த்தது
சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி, கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், காமராஜர் சாலை, E. S. I. மருத்துவமனை எதிரில் உள்ள அருணை‌ அரங்கில் நடைபெற்ற, 54, 60 மற்றும் 61 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் Ex. MLA. , அவர்கள்‌ கலந்து‌ கொண்டார். இந்நிகழ்வில், கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம்‌‌ உதவி ஆணையாளர் கவிதா, சிங்காநல்லூர் பகுதி - 2 திமுக செயலாளர், கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சிங்கை மு. சிவா Mc, மாமன்ற உறுப்பினர் ஆதிமகேஸ்வரி, திமுகவின் வட்டக்கழகச் செயலாளர்கள் கே. ஆனந்தகுமார், தென்னவர்‌ செல்வம், பொதுக்குழு உறுப்பினர்ஆடிட்டர் சசிகுமார், திராவிட மணி, வசந்தி, ராமு, கழக நிர்வாகிகள், கோவை‌ மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி அலுவலர்கள், கழக உடன்பிறப்புக்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.